ETV Bharat / state

“ஒரே கல்வித்தகுதியில் உள்ள ஆசிரியர்களிடையே ஊதிய பாரபட்சம் காட்டக்கூடாது - உயர் நீதிமன்றம்! - Teachers Pay Discrimination Case - TEACHERS PAY DISCRIMINATION CASE

School Teacher Pay Discrimination Case: ஒரே கல்வித் தகுதியில் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வில் பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 7:02 PM IST

சென்னை: கடந்த 1993ஆம் ஆண்டு அரசு துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக (2nd grade) பணியில் சேர்ந்த தாமோதரன் என்பவர், தனக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கவில்லை, ஆனால், தனக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 1998ஆம் ஆண்டு அதே பள்ளியில் பணியில் சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கு இரண்டு முறை கூடுதலாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரே கல்வித்தகுதி மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த இருவருக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் மட்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் 2013ஆம் ஆண்டு பி.டி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியில் உள்ளனர். ஏன் ஊதிய உயர்வு முரண்பாடு என மாவட்டக் கல்வி அதிகாரி தெளிவாக விளக்கவில்லை. அதனால், மனுதாரர் தாமோதரனுக்கு சேர வேண்டிய பணப் பலன்களை 8 வாரங்களில் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. பள்ளி இயக்குனரகம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.