ETV Bharat / state

இழுவை கட்டணம் பாக்கி.. சரக்கு கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு! - cargo vessel arrest - CARGO VESSEL ARREST

cargo vessel arrest order: ஒப்பந்தத்தின்படி இழுவை கட்டணம் தராததால் டால்பின் நம்பர் -1 சரக்கு கப்பலை சிறை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 6:14 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காக்கி நாடாவை சேர்ந்த ஆதித்யா மரைன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் கடலில் தரை தட்டி நிற்கும் கப்பல்களையும், பழுதாகி நிற்கும் கப்பல்களையும் இழுத்து செல்லும் பணியை செய்து வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் துறைமுகத்தில் பழுதாகி நின்ற டால்பின் நம்பர்-1 என்ற கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு இழுத்து செல்வதற்காக டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுவனம் எங்களை அணுகியது. அதன்படி, இருதரப்புக்கும் ஒப்பந்தம் நடந்தது. இதையடுத்து, எங்கள் இழுவை கப்பல் காரைக்கால் சென்றபோது டால்பின் நம்பர்-1 கப்பல் இழுத்து செல்ல முடியாத நிலையில் இருந்தது.

பழுதடைந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக காரைக்காலில் டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதால் அதை அங்கிருந்து இழுத்து செல்ல சென்னை வணிக கப்பல் துறை அந்த கப்பலை இழுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், உடனடியாக டால்பின் நம்பர்-1 கப்பலை அங்கிருந்த புறப்படுவதற்கு அனுமதி கிடைக்க உள்ளதாக கடந்த 8ம் தேதி எங்களுக்கு தகவல் வந்தது.

டால்பின் நம்பர்-1 கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டால் எங்களுக்கு தரவேண்டிய தொகையான 35 லட்சத்து 71 ஆயிரத்து 342 ரூபாய் கிடைக்காமல் போய்விடும். எனவே, டால்பின் நம்பர்-1 கப்பலை சிறை பிடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். ஆர். ராஜகோபால் ஆஜராகி, 'டால்பின் நம்பர்-1 கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து வருவதற்காக ஒப்பந்தத்தின்படி, அந்த நிறுவனம் தரவேண்டிய தொகை 35 லட்சம் ரூபாயை தரவில்லை' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் உள்ளதால் டால்பின் நம்பர்-1 கப்பலை சிறை பிடிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுவனம் செப்டம்பர் 2ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விமான சீட் பேனலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.