சென்னை: நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு திரும்ப செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறயதாக, விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அவரது அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விஷால் நேரில் ஆஜராக விலக்கும் அளித்தது. இந்த வழக்கில், 2021ஆம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவின்படி, விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்ற பதிவாளர் பெயரில் வைப்பு செய்யவில்லை.
28 கோடி ரூபாய் என்ற திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயை தங்களுக்கு வழங்கவில்லை என லைகா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஷால் தரப்பில், 15 படத்தில் சிறு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ளதாகவும், சக்ரா முதல் அனைத்து படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காததால், பணத்தை திரும்பக் கொடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “நீதிமன்றம் போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தை கொடுக்கத் தயாராக இல்லை என்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது?” என கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, “போதிய கால அவகாசம் வழங்கியும், வழக்கில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. அதனால், வழக்கில் தீர்வு காணும் வகையில், நடிகர் விஷாலின் வங்கி வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்ய ஏதுவாக, ஆடிட்டர் ஶ்ரீ கிருஷ்ணனை” நியமித்து உத்தரவிட்டார். மேலும், ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணன், மார்ச் 4ஆம் தேதிக்குள் விவரங்களை ஆய்வு செய்து, நீநிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை” - சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்!