சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் அரசு சார்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆகஸ்ட் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி!