ETV Bharat / state

மீண்டும் ஜாமீன் கோரிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்.. இம்மாதம் இறுதிக்கு ஒத்திவைப்பு! - Felix Gerald - FELIX GERALD

Felix Gerald bail Petition: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 3:15 PM IST

சென்னை: காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி T.V.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நூறு நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பின்னர், காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, விசாரணையை இம்மாதம் 29ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் டென்சனான நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.