ETV Bharat / state

150க்கும் மேலான கேள்விகள்.. இரண்டரை மணி நேர விசாரணை.. விஷாலிடம் குறுக்கு விசாரணை நிறைவு! - vishal case - VISHAL CASE

Actor Vishal: லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷாலிடம் குறுக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து, வழக்கறிஞர் வாதத்திற்காக விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

விஷால், சென்னை உயர்நீதிமன்றம்
விஷால் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 8:03 PM IST

சென்னை: விஷால் ஃப்லிம் பேக்டரி பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த தொகையை விஷால் செலுத்தாததை அடுத்து, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விஷாலிடம், லைகா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி இரண்டாவது நாளாக குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சினிமாத் துறையில் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினார். இதற்கு மாதம் ஒரு சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை வசூலிக்கப்படுவதாக பதிலளித்தார்.

மேலும், லைகாவிற்கு எதிராக விஷால் தொடர்ந்த ஜி.எஸ்.டி வழக்கு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷாலிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் மொத்தம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கு சாட்சிக் கூண்டில் நின்றவாறு சுமார் இரண்டரை மணி நேரம் விஷால் பதிலளித்துள்ளார். குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?”.. நீதிபதி -விஷால் இடையே காரசார வாதம்! - ACTOR VISHAL VS LYCA PRODUCTION

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.