ETV Bharat / state

சவ ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த தமிழ்நாடு காவல்துறை - உயர் நீதிமன்றம் ஏற்பு! - guideline for funeral procession

Guideline for Funeral Procession: சவ ஊர்வலங்களின் போது வழித்தடங்களை கண்காணிக்கவும், போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏதுவாக உயரிழந்தவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பின்பற்ற உத்தரவிட்டது.

guideline for funeral procession
guideline for funeral procession
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:40 PM IST

சென்னை: பண்ருட்டி அருகே சவ ஊர்வலத்தின் போது, சாலையில் வீசப்பட்ட பூ மாலை வாகனத்தில் சிக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உரிய விதிகளை வகுக்காததே இது போன்ற சம்பவத்திற்கு காரணம், அதனால் உரிய வழிகாட்டு விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கபுர்வாலாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், அன்புச்செல்வனின் கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, “சவ ஊர்வலங்களை எடுத்துச் செல்ல அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமை வழங்கியது.

ஆனால், இறுதி மரியாதை ஊர்வலத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும், சவ ஊர்வலங்களை இனி சாலையில் எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை வகுப்பது குறித்தும்” தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், காவல்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், "சடலங்களை எடுத்துச் செல்லும் வழித்தடங்களை கண்கானிக்கவும், போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏதுவாக, உயரிழந்தவரின் குடும்பத்தினர் முன்னரே காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சவ ஊர்வலங்களின் போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஏதுவாக நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை சாலையில் கிடக்கும் மாலைகளை அப்புறப்படுத்த காவல்துறை அழைக்க வேண்டும்.

மேலும், பாதாகைகளும், பேனர்களும் அனுமதி இல்லாத காரணத்தால், அவற்றை சவ ஊர்வலங்களில் வைக்க கூடாது. சவ ஊர்வலத்தில் மாலைகள் மற்றும் மலர் வளையங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கலாம். மீறி ஊர்வலங்களில் எடுத்துச் சென்று வீசப்பட்டால், அவற்றை காவல்துறை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஊர்வலங்களை தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளின் வழியாக எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஊர்வலங்கள் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட பாதையில் செல்லும் போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், சம்பந்தப்பட்ட அதிகாரி எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் அறிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க: ஒரு வாரத்தில் இலங்கை செல்லும் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், முருகன்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன? - Srilankan Passport To Murugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.