சென்னை: சென்னையில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1,960.50 காசுகள் ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பிற மாநகரங்களிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளன. இதனிடையே, வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல், ரூ.918.50 ஆகவே நீடிக்கிறது.
இதேபோல, டெல்லியில் ரூ.1795-க்கும், குஜராத்தில் ரூ.1,860-க்கும், மகாராஷ்டிராவில் ரூ.1,749-க்கும், புதுச்சேரியில் ரூ.1,959-க்கும், தெலங்கானாவில் ரூ.25 அதிகரித்து ரூ.2,027-க்கும் விற்பனையாகின்றன.
இந்நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றத்தால் ஹோட்டல் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு! ஏற்றுமதி தரவுகள் சொல்வது என்ன?