ETV Bharat / state

ஆடி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்! - Rameswaram Aadi Amavasai

RAMANATHASWAMY TEMPLE: ஆடி-அமாவாசை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 7:13 AM IST

ராமநாதபுரம்: தமிழ் மாதங்களில் வழிபாட்டிற்கு உகந்ததாகவும், சிறப்பு மிகுந்த மாதமாகவும் உள்ளது ஆடி. காரணம், ஆடி மாதத்தில்தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும், விவசாயம் செழிக்கும்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களில் உள்ள ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வது, புதுமணத் தம்பதிகளுக்கு தாலி பிரித்துக் கோர்ப்பது, தங்களுடைய முன்னேர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது உள்ளிட்ட பலவற்றை செய்வர்.

இந்தநிலையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஆடி - அமாவாசை தினத்தை முன்னிட்டு, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.

அவ்வாறு வந்த பக்தர்கள், அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து இறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தனர். பின்னர், கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து, புனித நீராடி விட்டு சாமி அம்பாளை தரிசனம் செய்துச் சென்றனர். பக்தர்களின் வருகையை ஒட்டி, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆடி அமாவாசை Vs மற்ற அமாவாசை.. சிறப்புகளும் ஆன்மீகமும் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.