ETV Bharat / state

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்! - Special Arrangement for election

2024 Parliamentary Election Special Features: 2024 நாடாளுமன்ற தேர்தல் திருவிழா குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் உள்ள மிக முக்கிய சிறப்பு அம்சங்களை இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம்..

lok-sabha-election-2024-special-arrangement-by-election-commission-of-india
2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பின் சிறப்பு அம்சங்கள் என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 4:02 PM IST

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்:

  • 2024ஆம் ஆண்டு இந்தியா உட்பட 70 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
  • இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முன் பணிகள் 2 ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட்டது.
  • இந்தியா முழுவதும் 10.5 லட்சம் வாக்கு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
  • தேர்தலில் 96.8 கோடி நபர்கள் வாக்கு அளிக்க உள்ளனர்.
  • 55 லட்சம் மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
  • 49.7231994 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
  • 47.1541888 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
  • 48,044 கோடி மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
  • மொத்தம் 96,88,21,926 வாக்காளர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
  • 1.82 கோடி முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
  • 1.4 கோடி வாக்குசவாடி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருப்பார்கள்.
  • 4 லட்சம் வாகனங்கள் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
  • 85 வயது மதிக்கத்தக்க வயதானவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 2024 ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது முடிவடைந்தவர்கள் வாக்களிக்கலாம்.
  • சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு தேர்தல் நடத்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காகித தாள்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் எந்த பகுதியிலிருந்தால் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
  • தேர்தல் சம்பந்தமான புகார்களை சி-விஜில் செயலியின் மூலம் புகார் அளிக்கலாம்.
  • தங்களது தொகுதி மற்றும் வாக்குசவாடி போன்ற விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆள்பலம், பணபலம், வதந்திகள் மற்றும் விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையத்திற்கு உள்ள நான்கு முக்கிய சவால்கள்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.
  • இந்தியாவில் எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ஏ.டி.எம்-களில் மாலை 6 மணிக்கு மேல் பணத்தை நிரப்பக் கூடாது.
  • சட்டவிரோத ஆன்லைன் பணப்பரிமாற்றம் கண்காணிக்கப்படும்.
  • பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரி மற்றும் அமலாக்கத்துறையினர் கண்காணிப்பார்கள்.
  • சமூக வலைத்தளங்களில் விமர்சனம் இருக்கலாம் வதந்திகள் இருக்கக் கூடாது.
  • சூரிய மறைவிற்குப் பிறகு பணப்பரிவர்த்தனைகள் கூடாது.
  • சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்.
  • வாக்குகளுக்குப் பணம், பொருள் கொடுத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • நாடு முழுவதும் சோதனை சவாடிகள் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் இன்று முதல் அமலாகும் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.