சென்னை: வாக்களிக்கச் செல்லும் போது, வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதனால், சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் செல்போனுடன் சென்றவர்களை தடுத்து நிறுத்தியதால் குழப்பம் ஏற்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள சில சாவடிகளில் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: கையில் பூத் சில்ப் இல்லை என்று கவலை வேண்டாம்.. ஆன்லைனில் அறிய இதோ வழிமுறைகள்! - Lok Sabha Election 2024
வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்ஃபி பூத் அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால், செல்போன் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், தெளிவான வழிகாட்டுதல் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவதை மொபைல்களில் ரீல்ஸ்களாக எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், வாக்கு மையங்களுக்குள் மொபைல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்களிக்கும் போது மட்டுமே செல்போனுக்கு தடை உள்ளதாகவும், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே மக்கள் வாக்களிக்கச் செல்லும் போது, தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்வது நல்லது.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - Lok Sabha Election 2024