தருமபுரி: தருமபுரி நகர அரிமா சங்கம் சார்பில், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தனது பதவி காலத்தில் முழு பங்காற்றியதாகக் கூறி தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. எஸ்.செந்தில்குமாருக்கு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்பி செந்தில்குமார், "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்ன வெற்றி பெற செய்ய பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தினேன். நாடாளுமன்றத்தில் என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தேன். 153 எம்பிக்களை அவர்கள் சஸ்பெண்ட் செய்த ஒரு காரணத்தினால் தான் 100 சதவீத வருகை இல்லை. மேலும், கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக கேள்வி கேட்டது நான்தான்” என்றார்.
இதையும் படிங்க: சோஷியல் மீடியாவில் முற்றும் மோதல்.. திருச்சி சூர்யா நீக்கப்பட்டதன் பின்னணியின் பாஜக முக்கியப்புள்ளி?
தொடர்ந்து பேசிய அவர், "சில நேரங்களில் நாடாளுமன்றம் இரவு 2 மணி வரை நடந்திருக்கிறது, எல்லா நாளிலும் சபாநாயகர் வீட்டுக்கு சென்ற பிறகுதான் நான் கிளம்பி இருக்கிறேன். எங்கெல்லாம் கருத்துக்களை பதிவு செய்ய முடியுமோ அங்கெல்லாம் நான் என்னுடைய கருத்துகளை பதிவு செய்து இருக்கிறேன்.
தனிநபர் மசோதா நலத்திட்டங்களை தமிழகத்தில் 17வது மக்களவையில் யாரும் செய்திடாத, வாங்கிடாத தொகை 15 ஆயிரம் கோடிக்கு மேல் தருமபுரி மாவட்டத்திற்கு வாங்கி கொடுத்திருக்கிறேன். 15 ஆண்டு நல்லது செய்த பிறகு, நல்ல பெயருடன் வெளிய வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதனை 5 ஆண்டுகளிலேயே செய்ய முடிந்திருக்கிறது.
தருமபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாவது அலகு மற்றும் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சாலை இல்லாத மலைக் கிராமத்திற்கு சாலை அமைக்க அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொப்பூர் மலை பாதையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சுமார் 800 கோடியில் சாலை அமைக்க அனுமதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன்" என தான் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: 'நேற்று முளைத்த காளான் உதயநிதியை திமுக எம்.பி.க்கள் வாழ்க என சொல்லலாமா?'