ETV Bharat / state

கடனை தீர்த்து வை முருகா.. வரவு - செலவுடன் முருகனுக்கு எழுதிய கடிதம் வைரல்..

Letter to Lord Murugan: கடனை தீர்த்து வை குமாரசாமிப்பேட்டை முருகா கடன் தொகையும் வரவேண்டிய தொகையும் எழுதி உண்டியலில் கடிதமாகப் போட்டுச் சென்ற பக்தரின் கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

letter-to-lord-murugan-with-budget-goes-viral
கடனை தீர்த்து வை முருகா.. வரவு - செலவுடன் முருகனுக்கு எழுதிய கடிதம் வைரல்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 5:48 PM IST

தருமபுரி: தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து திருக்கோயிலுக்கு உள்ள சிவசுப்பிரமணிய சுவாமியைத் தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலையும் வேண்டுதல் நிறைவேறியதற்கான காணிக்கையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.

திருத்தேர் திருவிழா முடிவு அடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர் கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் அறங்காவலர் குழு தலைவர் சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டியலிலிருந்த ரூபாய் 2 லட்சத்து, 21ஆயிரத்து, 777 பணம் 4 தங்கம் 165 கிராம் வெள்ளி உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது.

அப்போது, பணத்துடன் ஒரு வெள்ளை நிற சீட்டு இருந்தது. அதில், சில வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது இதனை உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டிருந்தவர் யாரோ ஒருவர் தங்கள் தொலைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், பக்தர் ஒருவர் பலருக்குத் தான் தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அதில், மொத்தம் ஒரு கோடியே 43 லட்சத்து 50,000 கடன் உள்ளதாகவும் அந்த கடன் விரைவாக அடைய வேண்டும் என்றும் தனக்குச் சிலரிடமிருந்து வரவேண்டிய தொகையான ரூபாய் 10 கோடியே 10 லட்சத்தை விரைவில் வந்து சேர வேண்டும் எனக் குறிப்பிட்டு.

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடைகள் நீங்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
முருகா முருகா ஓம் முருகா கடன் அடைய வேண்டும் முருகா...

எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.