ETV Bharat / state

"டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடையைத் திறந்துவிடலாம்" - பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு! - ANNAMALAI about TASMAC

BJP State President Annamalai K: சாராயத்தைக் குடித்து வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்ளாமல், கள்ளைக் குடியுங்கள் என்றும், டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளுக்கடையைத் திறந்துவிடலாம் எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP State President Annamalai
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 3:10 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கோயம்புத்தூர்: கோவையில் தமிழ்நாடு - கேரள எல்லையான ஆனைகட்டி மலைப்பகுதியில், தமிழ்நாடு பாஜக தலைவரும், அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஆனைகட்டி பகுதியில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அதிகமாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தும் பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று.

இந்த பகுதிக்கு வரக்கூடிய நிதி அனைத்தும், மத்திய அரசின் நிதியாகும். இந்த பகுதியில் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏகலைவா பள்ளிகள் கொண்டு வரவேண்டும். வீடு, சிலிண்டர் உள்ளிட்ட மத்திய அரசின் சலுகைகள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 3வது முறையாக பிரதமராக மோடி ஆட்சியில் அமர வேண்டும்.

பிரதமர் மோடி வந்தவுடன்தான், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோன்று, மத்திய அரசின் 100 சதவிகித திட்டங்களும், மக்களுக்கு வந்து சேர வேண்டும். செங்கல் சூளையில் மண் எடுப்பதில் இங்கே பிரச்னை இருந்து வருகிறது. திமுக குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றது.

இவர்களே பிரச்னையை துவக்கிவிட்டு, பின்னர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்கு, சுற்றுச்சூழல் அமைச்சரிடம் பேசி தான் தீர்வு காண வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமலும், இயற்கைக்கு பாதிப்பு இல்லாமலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் நிறைந்து இயற்கை வளமிக்க பகுதியாக இப்பகுதி இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில் இது போன்ற பகுதிகளைத் தேடி அனைவரும் வருவார்கள்.

அப்போது இந்த பகுதி பொழிவாகவும், அதேநேரம் வளர்ச்சி அடைந்தும் இருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் மரியாதை இருந்தது. ஆனால், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை, அரசியல் அதிகாரம் வழங்கி, இந்தியாவின் முதல் குடிமகளாக ஆக்கி கௌரவித்தது, பாஜக தான். பிரதமர் மோடி பழங்குடி மக்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றார். இந்த பகுதியில் மனித - விலங்கு மோதலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த ஒரு வண்டி (பாஜக) மட்டும்தான் டெல்லி செல்லும். மற்றது எல்லாம் லோக்கல் வண்டி தான். டெல்லிக்கு போகும் ஒரே வண்டி, இந்த வண்டிதான். இங்கிருக்கும் டாஸ்மாக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுக்கிறது. இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களில் இருக்கும் டாஸ்மாக்கையும் எடுக்கவே அரசியலுக்கு வந்திருக்கின்றோம். குடியினால் எல்லோருக்கும் பிரச்னைகள் மட்டும் தான் ஏற்படும்.

ஜனநாயகத்தில் குடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. சாராயத்தைக் குடித்து வயிற்றை புண்ணாக்கிக் கொள்ளாமல், கள்ளைக் குடியுங்கள். டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளுக்கடையைத் திறந்துவிடலாம். கேரளாவில் அப்படித்தான் இருக்கின்றது. ஆனைகட்டி பகுதியில் திமுக நம்மை விலை பேசி விடலாம் என நினைக்கின்றனர். அதை நாம் உடைத்தெறிய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி! - L Murugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.