ETV Bharat / state

சேலம்: எடப்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்.. பசு மாட்டை அடித்துக் கொன்றதால் பரபரப்பு! - SALEM LEOPARD MOVEMENT

சேலத்தில் மாவட்டம் எடப்பாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து மாட்டை கடித்துக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:41 PM IST

Updated : Jul 18, 2024, 2:56 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சியைச் சேர்ந்த கோம்பை காடு பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதாக விவசாயிகள் அடுக்கடுகான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதையன் என்பவரது வீட்டில் கட்டி இருந்த பசு மாட்டை சிறுத்தை இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது.

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து தகவலின் பெயரில் வனச்சரக அலுவலர்கள் அந்தப் பகுதியில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் சிறுத்தையைப் பிடிக்கும் வகையில் தோட்டத்தில் கூண்டு வைத்துள்ளனர்.

பின்னர் கடந்த 14ஆம் தேதி ட்ரோன் மூலமாக கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ஆவடத்தூரை சேர்ந்த பூபாலன் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆராய்ந்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது. இதனை அடுத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் அப்பகுதியில் கூடுதலாக கூண்டுகள் வைத்து அதில் ஆடு, மாடு மாமிசத்தைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப் படுத்தியுள்ளனர். மேலும் சுற்றியுள்ள மலை கிராமங்களில் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, எடப்பாடி வட்டம் ஆணைப்பள்ளம், பக்கநாடு, செம்மலை கரடு மற்றும் கோம்பைக்காடு ஆகிய பகுதிகளில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே இப்பகுதியைச் சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம்.

குழந்தைகளைத் தனியாக வெளியே செல்லவும், மாலை நேரங்களுக்கு மேல் விளையாடவும் அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையை ஓட்டியுள்ள பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் பள்ளி மாணவனைச் சுற்றிவளைத்து சக மாணவர்கள் தாக்குதல்.. போலீசார் விசாரணை!

Last Updated : Jul 18, 2024, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.