ETV Bharat / state

மதுபானக் கூடத்தில் காலாவதியான கூல்டிரிங்ஸ்? கல்லூரி மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசு மதுபானக் கடை பாரில் காலாவதியான கூல்டிரிங்க்ஸ்ஸை வாங்கி குடித்ததால் தமக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், இதுபோ உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட வேண்டுமென்றும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

பாதிக்கப்பட்ட மாணவர்
பாதிக்கப்பட்ட மாணவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமநாதபுரம் : மதுரை மாவட்டத்தில் உள்ள பிரிஸ்ட் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஜான் பெனடிக்ட். இவர் தனது நண்பர்களுடன் திருப்பாலைக்குடியில் ஒரு வழக்கு விசாரணைக்காக சென்றிருக்கிறார்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகு, இவருடன் வந்த நண்பர்கள் மதுபானம் குடிக்கலாம் என எண்ணி திருப்பாலைக்குடி அருகில் மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது குடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நண்பர்களுடன் இவரும் சென்றுள்ளார்.

மாணவர் ஜான் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

மதுப்பழக்கம் இல்லாத ஜான் அந்த மதுபானக் கடை பாரில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்திருக்கிறார். குடித்த 10 நிமிடத்தில் ஜான்க்கு தலைச்சுற்று ஏற்பட்டும், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டும் வாந்தி எடுத்திருக்கிறார். உடனடியாக சுதாரித்த அவர், அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலில் தேதியை பார்த்தபோது கூல்டிரிங்ஸ் காலாவதியாகி 40 நாட்கள் ஆனது தெரியவந்தது.

உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜான் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : உங்கள் வீட்டு Electric Kettle பழுதடைந்து கிடைக்கிறதா? அப்ப, இது தான் காரணம்!

இதுகுறித்து மதுபானக் கடைக்காரரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, மதுபானக் கடையின் உரிமையாளர் வந்த நிலையில் அவரிடம் இதுகுறித்து தெரிவித்து இருக்கின்றனர். அவர் இதுகுறித்து விசாரணை செய்வதாக கூறி சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஜான் கூறுகையில், "நேற்றிரவு மருத்துவமனை வந்த எனக்கு காவல்துறையிடம் இருந்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. நான் வழக்கறிஞர் மாணவர் என்று கூறிய நிலையில் தற்போது தான் விசாரணை செய்து வருகின்றனர்.

எனக்கு நடந்திருப்பது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. இதுகுறித்து காவல்துறையும், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உடனடியாக விசாரணை செய்து காலாவதியாகி இருக்கின்ற அனைத்து கூல்டிரிங்ஸ் பாட்டில்களையும் அப்புறப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதனிடையே, மாணவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஈடிவி பாரத் தரப்பில் தொடர்புகொண்டு கேட்டபோது அதுகுறித்து விளக்கமளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.