ETV Bharat / state

"மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு" - பஞ்சாங்க கணிதர் மதன் அகத்தியர்! - Valluvar Kula Jyothidar Sangam

Valluvar Kula Jyothidar Sangam Madan Agathiyar: 2024- 25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 90% 90ஸ் கிட்ஸ்க்கு திருமணம் நடக்கும் எனவும், இதற்கு நான் கேரண்டி என பஞ்சாங்க கணிதர் மதன் அகத்தியர் தெரிவித்துள்ளார்.

Tiruppur
திருப்பூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 6:21 PM IST

"மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு" - பஞ்சாங்க கணிதர்கள்!

திருப்பூர்: பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர் சங்கம் சார்பாகக் குரோதி வருடப் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாங்க கணிதர் மதன் அகத்தியர், "2024-25ஆம் ஆண்டு குரோதி வருடத்திற்கான பஞ்சாங்கம் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 17 புயல்கள் வரும். அதில் 11 புயல்கள் வலுவற்றது. ஆறு புயல்கள் வலுவானது. என கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல் உலகின் தென்கிழக்கு நாடுகளில் அதிக சேதம் இருக்கின்ற நிலையில் தென்மேற்கு நாடுகளில் இதனால் சேதம் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த ஆண்டு பெரும் அழிவுகள் இருந்தாலும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ள இந்தியாவிற்கு அழிவு குறைவாக இருக்கும்.

அதேபோல் மழையின் அளவை பொருத்தவரை எங்கெல்லாம் கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததோ அங்கெல்லாம் குறைவாகவும், குறைவாகப் பெய்த இடங்களில் அதிகமாகவும் பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் விலைவாசியானது நிலையானதாக இருக்காது. ஏற்றத்துடனும், இறக்கத்துடனும் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனைப் பற்றிக் கணிப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாத நிலையான தன்மையே நீடிப்பதாகப் பஞ்சாங்கத்தில் கணித்திருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து 90ஸ் கிட்ஸ்களின் திருமணம் குறித்த கேள்விக்கு, 2024- 25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 90% 90ஸ் கிட்ஸ்க்கு திருமணம் நடக்கும் எனவும் இதற்கு நான் கேரண்டி எனவும் தெரிவித்தார். அதற்காக மல்லிகைப் பூவை இறைவன் முன் வைத்து பெரியோர்களிடம் ஆசி பெற்று வணங்க வேண்டும் என பரிகாரத்தையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு.. எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் தெரியுமா? - Final Voters List In Tamil Nadu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.