ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் தாயார் வேட்பு மனு தாக்கல்! - VIKRAVANDI BYE ELECTION

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 6:52 PM IST

Srimathi mother file nomination: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, இறுதி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்பு மனு தாக்கல்
ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்பு மனு தாக்கல் (CREDIT -ETV Bharat TamilNadu)

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானதை அடுத்து, இத்தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில மனுதாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 24 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 26 ஆம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் கள்ளக்குறிச்சி கனியாமூரில் மறைந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்தபின் பேட்டியளித்த அவர், "கடந்த இரண்டு வருடங்களாக அளவில்லா கஷ்டத்தை அனுபவித்து வந்ததாலும் சாதாரண மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால் அதிகாரம் கையில் இருக்க வேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இடைத்தேர்தலில் வெற்றி பெற மடிப்பிச்சையாக விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் வாக்குகளை கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் நிறைவு: விக்கரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி இத்தேர்தலில் திமுக,பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 64 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மரணம்; பேரவையில் அமளி... அதிமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றம்! - Kallakurichi Illicit liquor tragedy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.