ETV Bharat / state

குவைத் தீ விபத்து; சொந்த ஊர்களுக்கு வந்த தமிழர்களின் உடல்.. கதறி அழுத உறவினர்கள்! - Kuwait Fire Accident - KUWAIT FIRE ACCIDENT

Kuwait Fire Accident: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 9:28 AM IST

Updated : Jun 15, 2024, 10:12 AM IST

திருச்சி: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த இந்தியர்களில் 7 பேர் தமிழர்கள் எனவும் தகவல் வந்தது. இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும், உயிரிழந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்த தமிழர்களின் உடலைக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 31 நபர்களின் உடல் இந்திய போர் விமானத்தின் மூலம், நேற்று காலையில் புறப்பட்டு, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கு காலை 10.45 மணியளவில் வந்தடைந்தது. இதற்கிடையே, தமிழர்களின் உடல்களைப் பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்றிருந்தார்.

பின்னர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு மதியம் 1 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த வகையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த எபமேசன் ராஜுவின் (53) உடல் நேற்று இரவு 10.22 மணிக்கு அவரது சொந்த வீட்டுக்குச் சென்றடைந்தது. அப்போது ராஜுவின் உடலைப் பார்த்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே, அரசு சார்பில் திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, ஏடிஎஸ்பி குத்தலிங்கம் ஆகியோர் நேரில் சென்று, ராஜுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல், சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன் என்பவரின் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை 4.00 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, சென்னை இராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் காசிமேட்டில் உள்ள இந்து மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (41) உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அவரது உடலைக் காண அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி மொத்த கிராமமுமே காத்திருந்தது. தொடர்ந்து, இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் அரசு சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய், கோவில்பட்டி நகர மன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் புனாஃப் ரிச்சர்ட் ராய் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், புனாஃப் ரிச்சர்ட் ராயின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, புனாப் ரிச்சர்ட் ராயின் அப்பா ஆனந்த மனோகரனிடம் முதலமைச்சர் அறிவித்த பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர், இரவோடு இரவாக அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு என்பவரின் உடல் நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு வந்தடைந்தது. உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி கிராமம் முழுவதும் சோகத்தை நிரப்பியுள்ளது. பின், கருப்பணன் இராமுவின் உடலை இன்று காலை நல்லடக்கம் செய்தனர். மேலும், அவரது இறப்பு குறித்து கிராமத் தலைவர் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகள் அவரது உடலை துரிதமாக கொண்டு வந்ததற்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை உடல் அவரது சொந்த ஊருக்கு நள்ளிரவில் வந்தடைந்தது. அதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க உடலை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று காலையில் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு 10 மணிக்கு மேல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மேலும், சின்னதுரை உயிரிழப்பு தொடர்பான ஆவணங்கள் வருவாய்த்துறை மூலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோயில் திருவிழாக்கு வந்து சென்றவர் குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு.. தூத்துக்குடி அருகே சோகம்!

Last Updated : Jun 15, 2024, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.