ETV Bharat / state

யானைக்கு விருதா? ஆச்சரியமா இருக்குதுல! செய்திய முழுசா படிங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 10:49 PM IST

kumbakonam Mangalam Elephant: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரன் கோயிலில் 42 ஆண்டு காலமாக பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் யானைக்கு டெல்லியை சேர்ந்த லோத் தந்திரா அவுர் ஜனதா என அமைப்பின் சார்பில் ஆக்டிவ் எலிபாண்ட் அவார்டு (An Active Elephant Award) வழங்கப்பட்டுள்ளது.

Active Elephant Award to Mangalam  Elephant
கும்பகோணம் மங்களம் யானைக்கு விருது
கும்பகோணம் மங்களம் யானைக்கு விருது

தஞ்சாவூர்: தமிழக கோயில்களில் பராமரிக்கப்பட்டு யானைகளிலேயே சிறந்த செயல்பாடு கொண்ட யானையாகவும், யானை பராமரிக்கும் இடம் தூய்மையாக, சுகாதாரமாக பேணிப்பட்டு வருவதை போற்றிடும் வகையில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரன் கோயிலில் உள்ள மங்களம் யானைக்கு ஆக்டிவ் எலிபாண்ட் அவார்டு (An Active Elephant Award) வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சைவத்திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும், ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில், கடந்த 1982ம் ஆண்டு மறைந்த காஞ்சி மகா பெரியவர் அவர்களால் 14 வயதிலான பெண் யானை மங்களம் என பெயரிட்டு இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது.

மங்களம் யானைக்கு 56 வயதாகும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக பாகன் அசோக் பராமரித்து வருகிறார். இந்த யானைக்கு கும்பகோணம் டிகிரி காபி மிகவும் பிடித்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான, லோத் தந்திரா அவுர் ஜனதா என அமைப்பின் சார்பில், கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, யானையின் செயல்பாடு, அதன் பராமரிப்பு முறைகள், அதன் இருப்பிட சுத்தம், சுகாதாரம், ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மொத்தம் 38 கோயில் யானைகளை முழுமையாக ஆய்வு செய்தனர். அதில், யானையின் செயல்பாடு, சுத்தம் சுகாதார பேணி காத்தல், ஆகியவற்றை அதிக புள்ளிகளை பெற்று, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரன் கோயில் யானை மங்களம் சிறப்பிடம் பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று (பிப்.04) திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் முன்னிலையில், டெல்லி லோத் தந்திரா அவுர் ஜனதா அமைப்பின் தென்மாநில நிர்வாகிகளான அஜித்குமார் மற்றும் மதன் ஆகியோர் இணைந்து இந்த விருதினை யானை பராமரிப்பாளர் அசோகிடம் ஆக்டிவ் எலிபாண்ட் அவார்டு (An Active Elephant Award) வழங்கினர். மேலும், யானை பாகன் அசோக் மற்றும் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.