ETV Bharat / state

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு; நிவாரண நிதி வழங்கிய திமுக எம்எல்ஏ க.அன்பழகன்! - G Anbalagan gives lanslide relief

RELIEF MATERIALS TO VAYANAD OF KERALA: கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 லட்ச மதிப்பிலான நிவாரண நிதியை எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வசம் அளித்தார்.

நிவாரண நிதியை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வசம் வழங்கும் எம்எல்ஏ க. அன்பழகன்
நிவாரண நிதியை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வசம் வழங்கும் எம்எல்ஏ க. அன்பழகன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 10:01 PM IST

தஞ்சாவூர்: கேரள மாநிலம் வயநாடு மலை பகுதியில், கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக பெருவெள்ளம் பாதிப்பில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். எண்ணற்ற குடியிருப்புகள், கட்டிடங்கள் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த பெரும் துயரில் இருந்து அங்குள்ள மக்களை காக்கும் பொருட்டு, கும்பகோணம் அன்பு மருத்துவமனை நிர்வாகம், ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில், ஆன்டிபயாடிக், சளி, இருமல், காய்ச்சலுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், சிரப்புகள் வாந்தி வயிற்றுப்போக்கிற்கான தடுப்பு மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் என ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவப் பொருட்களும், பிஸ்கெட் பாக்கெட்டுகள், ரஸ்க் பாக்கெட்டுகள், கடலை மிட்டாய் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்தி, டவல்கள், தீப்பெட்டிகள், நாப்பின் ஆகியவை ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் நிறுவன தலைவரும், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை க அன்பழகன் எம்எல்ஏ, இன்று (ஆகஸ்ட் 5) மாலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்க, அதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் முறைபடி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில், துணை மேயர் சு.ப தமிழழகன், கோட்டாட்சியர் பூர்ணிமா, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த துயரத்தில் உயிரிழந்தோர் ஆன்மா அமைதி பெற வேண்டி, 2 நிமிடம் அமைதி காத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிரதமர் மோடி வயநாட்டுக்கு சென்றால் தான் அதிசயம்! - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.