ETV Bharat / state

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழ்நாட்டில் பாஜக களமிறக்குமா? - கே.பி.முனுசாமி கேள்வி

K.P.Munusamy: பாஜகவிற்கு தைரியம், தில்லு இருந்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 2 தமிழர்களை, தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது போட்டியிடச் செய்து வெற்றி பெற செய்ய முடியுமா என்று கே.பி.முனுசாமி பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர்
கே பி முனுசாமி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:27 PM IST

கிருஷ்ணகிரி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, திமுக, பாஜக கூட்டணி என்று தனித்தனி அணிகளாக போட்டியிட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சில பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி, வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதியில், சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

பின்னர், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஏன் ராஜ்யசபா எம்பியாக்கினீர்கள்? தேர்தலில் நிற்க வைக்க வேண்டியதுதானே, ஏன் நிற்க வைக்கவில்லை? தேர்தலில் நின்றால் ஜெயிக்க முடியாது என்று உங்களுக்கே தெரிகிறது. பிறகு ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளார்கள். அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்தவர். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பாரதிய ஜனதாவிற்கு தைரியமும், தில்லும் இருந்தால், தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலாவது நிறுத்துங்கள். தமிழக மக்கள் எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள் ”என சவால் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.