கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட கேரளம் வாகன ஆய்வாளர்கள், அவ்வழியாக வந்த தமிழக வாகனத்தை ஆய்வு செய்ததில், ஒரிஜினல் டயருக்கு பதிலாக ஆல்ட்ரேஷன் டயர் போட்டுள்ளதால், ஸ்டெப்ணியை சேர்த்து 5 டயர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் அருகில் உள்ளதால், ஏராளமான பொதுமக்கள் எல்லையோரம் உள்ள கோவிந்தபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புனி, செம்மணம்பதி சோதனை சாவடிகள் வழியே அன்றாட பணிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.
அப்பகுதிகளில் கேரள போலீசார் மற்றும் வாகன ஆய்வாளர்கள், அவ்வழியாகச் செல்லும் தமிழக வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து அபராதங்களை விதித்து வருகின்றன. சமீபத்தில் நான்கு நண்பர்களுடன் ஒரு பெண் சென்ற வாகனத்தை நிறுத்தி, ஆதார் அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ வைரலாகியது.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில், கேரள போலீசார் மற்றும் வாகன ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த தமிழக வாகனத்தை, போலீசார் வழிமறித்த ஆய்வு செய்துள்ளனர். இதில், வாகனத்தின் ஒரிஜினல் டயருக்கு பதிலாக ஆல்ட்ரேஷன் டயர் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறி, டயர்களுக்கு தலா 5 ஆயிரம் அபரதாம் என்று 4 டயர்களுக்கு ரூ. 20 ஆயிரமும், ஸ்டெப்ணிக்கு 5 ஆயிரம் சேர்த்து 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து, வாகன ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழகத்தில் இருந்து வந்த வாகனத்தை ஆய்வு செய்த போலீசார், அதில் ஒரிஜினல் டயருக்கு பதிலாக ஆல்ட்ரேஷன் டயர் பொருத்தப்பட்டுள்ளது என்பதால், டயர்களுக்கும் தலா 5 ஆயிரம் என 4 டயர்கள் மற்றும் ஸ்டெப்ணிக்கு சேர்த்து 25 ஆயிரம் மற்றும் நம்பர் பிளேட் ஸ்குரூ செய்து ஒட்டப்பட்டுள்ளதாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அவ்வழியாக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாகனத்தை ஆய்வு செய்த போலீசார் எந்த அபராதமும் விதிக்காமல் அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த வாகனத்தில், கூடுதலாக ஹெல்லா லைட் (Hella Light), 4 எல்இடி (LED Light) மற்றும் ஆல்ட்ரேஷன் டயர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அதில் black sun control film பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வண்டியைப் பிடிக்காமல், தமிழ்நாட்டு வாகனத்தை மட்டும் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். அதற்கான காரணத்தைக் கேட்டால் போலீசார் கூறவில்லை” என்று கூறினார். தொடர்ந்து இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தக்காளி சாஸில் நெழிந்த புழுக்கள்.. நடிகர் விஜய் விஷ்வா ஆவேசம் - வீடியோ வைரல் - Actor Vijay Vishwa