ETV Bharat / state

“எம்ஜிஆர் போட்ட பிச்சை.. அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது யார்?” - கே.சி.வீரமணி கடும் தாக்கு! - latest news in tamil

Former minister KC Veeramani: திருப்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், எதிர்கட்சியாக இருக்கும்போது திமுக நல்ல வாய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாற வாய், தேர்தல் அறிக்கையில் கொடுத்த 520 வாக்குறுதிகளில் ஒன்றைகூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:48 PM IST

Updated : Feb 3, 2024, 12:45 PM IST

அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூர்: திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணி செய்த பட்டிலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி, கொடூரத் தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில், திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கண்டன உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, “எதிர்கட்சியாக திமுக இருந்தபோது பேச்சாயா பேசுன என்று வடிவேலு காமெடியில் வருவது போல், எதிர்கட்சியாக இருக்கும்போது நல்ல வாய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாற வாய். தேர்தல் அறிக்கையில் கொடுத்த 520 வாக்குறுதிகளில் ஒன்றை கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், ஸ்டாலின் செய்கிறார்.

ரஜினிகாந்த்தின் அருணாச்சலம் படத்தில் வருவது போல, ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்கிறான். எம்.ஜி.ஆர் போட்ட பிச்சையால்தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். நீங்கள் ஆட்சிக்கு எப்படி வந்தீர்கள்?, யார் மூலமாக ஆட்சியைப் பிடித்தீர்கள். வரலாறு சொல்கிறது, கருணாநிதி எம்ஜிஆரிடம் சென்று, எப்படியாவது என்னை ஒரு முறை முதலமைச்சர் ஆக்குங்கள் என கெஞ்சியதின் பெயரில், எம்.ஜி.ஆர் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி நிலைத்து நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். நீங்களாகவா வளர்ந்தீங்க? இல்ல உங்க தலைவன் கருணாநிதி வளர்த்தாரா? அண்ணாவை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்ததும் எம்.ஜி.ஆர்தான்” என பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகின்றனர்.. கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

Last Updated : Feb 3, 2024, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.