கரூர்: கரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போலீசார் தினந்தோறும் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அரவக்குறிச்சி மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்துப்பணியில் அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபு ஆகியோர்கள் ரோந்து பணி ஈடுப்பட்டிருந்தனர்.
போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே: அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்த போது, திடீரென அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து காவலர்கள் மீது அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து தப்பி ஓடி முயன்ற இளைஞர்களை போலீசார் லாவகமாக பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு கடைகள் டெண்டர் வழக்கு: சுற்றுலாத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு!
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்: அங்கு அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓட நினைத்த இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் விளாசார் சாலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த கோகுல் (27) மற்றும் திருச்சி மாவட்டம் வடுக தெரு பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (21) என்பது தெரிய வந்துள்ளது.மேலும் இருவர் மீதும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதை குற்ற ஆவணங்களை வைத்து கண்டறியப்பட்டுள்ளது.
வீடுகளை உடைத்து திருட முயற்சி: அவர்கள் வைத்திருந்த பையை (Bag) சோதனை செய்ததில், அதில் 2 இரும்பு ராடுகள், திருப்புலி, மாஸ்க், கிளவுஸ், பெப்பர் ஸ்பிரே மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் இருப்பது தெரியவந்துள்ளது. அதை வைத்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் இருவரும் அரவக்குறிச்சி மற்றும வெள்ளியணை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடுவதற்காக வந்ததுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து வெள்ளியணை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த இரண்டு குற்றவாளிகளையும் பிடித்த காவலர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினார்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்