கரூர்: கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை விட 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | ஜோதிமணி | காங்கிரஸ் | 5,34,906 |
2 | தங்கவேல் | அதிமுக | 3,68,090 |
3 | செந்தில்நாதன் | பாஜக | 1,02,482 |
4 | கருப்பையா | நாதக | 87,503 |
- 5 மணி நிலவரப்படி, கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 402323 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க வேல் 278727 வாக்குகளும், பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் 77064 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 66506 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேலினை விட 123596 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 4 மணி நிலவரப்படி, கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 323777 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க வேல் 228646 வாக்குகளும், பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் 63132 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 55580 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேலினை விட 95131 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 279322 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க வேல் 199715 வாக்குகளும், பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் 55206 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 47892 வாக்குகளும் பெற்றுள்ளனர். - 3.40PM நிலவரம்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் 11,25,241 வாக்குகள் (78.70%) பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு 11,03,165 வாக்குகள் (81.5%) பதிவாகின.
2019ஆம் ஆண்டு வெற்றி நிலவரம்: திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 6956697 வாக்குகள் பெற்று 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை 275151 வாக்குகளும், நாதக சார்பில் போட்டியிட்ட கருப்பையா 38543 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட தங்கவேல் 31139 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹரிஹரன் 15,967 வாக்குகள் பெற்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; 54 வேட்பாளர்கள் களம் கண்டுள்ள கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - TN Lok Sabha Election Result 2024