ETV Bharat / state

கரூரில் சாதி பெயரை தாங்கியிருந்த கிராமத்திற்கு 'குறிஞ்சி நகர்' என பெயர் மாற்றம்! - KARUR COLLECTOR

கரூர் மாவட்டத்தில் சாதி பெயரைக் கொண்ட குக்கிராமத்தின் பெயரை குறிஞ்சி நகர் என மாற்றம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 10:47 PM IST

கரூர்: கரூர் அருகே உள்ள கடவூர் தாலுகா கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மத்தகிரி கிராம ஊராட்சியில் உள்ள சக்கிலியப்பட்டி என்ற குக்கிராமத்தின் பெயரை குறிஞ்சி நகர் என பெயர் மாற்றம் செய்து, அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் (தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார்) கரூர் மாவட்ட அரசு இதழில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி சிறப்பு வெளியீடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த புகார் மனுக்கள் தொடர்பாக, தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மத்தகிரி கிராம ஊராட்சியில் உள்ள ஒரு குக்கிராமம் குறிஞ்சி நகர் என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக கரூர் மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஊராட்சி செயலாளர், மாவட்ட பதிவாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: 'அவசரகதியில் முதல்வர் செயல்பாடு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அறிக்கை

மேலும், அந்த சுற்றறிக்கையுடன் அரசு இதழில் வெளியான ஆவணத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, குறிஞ்சி நகர் என மாற்றம் செய்து அனைத்து அரசு பதிவேட்டிலும் பதிவு செய்து திருத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி, 37 அரசு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.