ETV Bharat / state

"சிபிஎஸ்இயை விட தரமானது தமிழக அரசுப்பள்ளி" - முன்னாள் கன்னட மாணவர்கள் புகழாரம்! - Chikhali govt school Silver Jubilee - CHIKHALI GOVT SCHOOL SILVER JUBILEE

Chikhali govt school Silver Jubilee: கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் படித்த தமிழக அரசுப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட கன்னட முன்னாள் மாணவர்கள், சிபிஎஸ்சியை விட தரமானது தமிழக அரசுப் பள்ளி என பெருமையாக தெரிவித்தனர்.

சிக்கஹள்ளி அரசு பள்ளி வெள்ளி விழா புகைப்படம்
சிக்கஹள்ளி அரசு பள்ளி வெள்ளி விழா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 4:34 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த சிக்கஹள்ளியில் உள்ள தாளவாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசுப் பள்ளியாக இருந்தாலும், இங்கு கன்னட மொழிப்பாடம் முதன்மையாக கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில், இப்பள்ளியில் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இதில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு வயர்லெஸ் ஒலிபெருக்கியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சிக்கஹள்ளி பள்ளி வெள்ளி விழா முன்னாள் மாணவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் உயர் பதவியில் இருக்கும் முன்னாள் கன்னட மாணவ, மாணவியர்கள் பேசுகையில், "சிபிஎஸ்சியை விட தமிழக அரசுப் பள்ளிகள் சிறந்ததாக உள்ளது. கன்னட மொழியில் படித்த நாங்கள் கர்நாடக அரசு நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியராகவும், உயர் பதவியிலும், ஐடி நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றோம்.

இந்தப் பள்ளிக்கு அதிக டிமாண்டு உள்ளது. ஏனெனில், இங்கு தரமான கல்வி வழங்கப்படுவதால் தான், தற்போது நாங்கள் கர்நாடக அரசுப் பணியில் சேர்வது சாத்தியமானது. அதனால் பள்ளிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி" என பெருமையுடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இப்பள்ளி வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு சாம்ராஜ்நகர் மரியால மஹாசம்ஸ்தான மடம் இம்மடி முருகராஜேந்திர மஹா சுவாமி கலந்து கொண்டு, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, 25 ஆண்டுகளில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர் மேடையில் பேசுகையில், "மனித மாண்பில் அன்னதானம் வழங்குவதே சிறந்த பண்பாகும், அதைவிட உயர்ந்தது கல்வி அளிப்பது. பிறர் சிரித்து வாழ நாம் உதவினால், நம் சந்ததி செழிப்பாகும்" என்றார்.

தற்போது, தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் உள்ள தமிழக அரசுப் பள்ளிகளில் கன்னடம் முதன்மைப் பாடமாக உள்ளது. தாளவாடி சுற்று வட்டாரத்தில் 10 ஊராட்சிகளில் சுமார் 1 லட்சம் கன்னடம் பேசுபவர்கள். இங்கு கன்னடம் அதிகம் பேசுவதால், தமிழக அரசுப் பள்ளியில் கன்னடம் பாடம் கற்பிக்கப்படுகிறது. கன்னட ஆசிரியர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்படும் போது கன்னடம் அதிகமாக பேசும் மக்கள் வசிக்கும் தாளவாடி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டதால் கன்னடர்கள் இங்கு அதிகம் உள்ளனர். இதனால் தமிழக அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கர்நாடகத்தில் உயர் பதவியில் அதிகமானோர் உள்ளனர். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்த ஊர் தாளவாடி என்பதும், அவரும் இதே தாளவாடி பள்ளியில் தான் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் கல்வி விருது விழா: செய்தியாளரை ஒருமையில் திட்டிய பவுன்சர்? - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.