ETV Bharat / state

புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்.. காரைக்கால் எம்எல்ஏ-க்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்! - prn Thirumurugan

Puducherry new minister: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 6 மாதங்களாக காலியாக இருந்த புதுச்சேரி அமைச்சர் பதவிக்கு காரைக்காலைச் சேர்ந்த திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 3:40 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக இருந்த அமைச்சர் பதவி, காரைக்கால் வடக்கு தொகுதியைச் சேர்ந்த திருமுருகன் எம்எல்ஏ-க்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் வழங்கியிருப்பதாக அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதில், என்.ஆர்.காங்கிரசுக்கு மூன்று அமைச்சர் பதவிகளும், பாஜகவினருக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவான சந்திர பிரியங்கா பதவி வகித்தார்.

ஆனால், அவரது செயல்பாடுகள் சரியில்லை என கடந்த 2023 அக்டோபர் 10ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். குறிப்பிட்ட அமைச்சர் நீக்கப்படும் தருணத்தில், அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் சாதி ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி 6 மாதங்களாகியும், புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், தங்கள் பிராந்தியம் ஒதுக்கப்படுவதாக காரைக்கால் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதனால், புதிய அமைச்சர் நியமனத்திற்கான கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பியிருந்தார். யூனியன் பிரதேசம் என்பதனால், குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், இது தொடர்பாக அரசு இதழில் இன்று செய்தி வெளியானது. அதில், புதுச்சேரி அமைச்சராக திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். அவர் அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 6 மாதங்களாக காலியாக இருந்த அமைச்சர் பதவி காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன் எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காரைக்கால் எம்எல்ஏ திருமுருகன், வருகிற மார்ச் 7ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்கிறார்.

இதையும் படிங்க: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.