ETV Bharat / state

50% அரசு மானியத்துடன் கோழிப்பண்ணை.. எப்படி விண்ணப்பிப்பது? - குமரி ஆட்சியர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ் - Govt subsidies to poultry farm - GOVT SUBSIDIES TO POULTRY FARM

Poultry Farm Subsidy Applications: கன்னியாகுமரியில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அமைப்பதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும், அதில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் புகைப்படம்
கோழிப்பண்ணை மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் புகைப்படம் (Credits - Getty Images and kanyakumari collector 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 12:51 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவத் தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்குத் தேவையான தீவனச்செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,56,875) மாநில அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறத் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் அல்லது அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் 2022 - 2023 மற்றும் 2023 - 2024ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கப்பட்டது.

நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்: அதன் காரணமாக நடப்பாண்டில் இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்குத் தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம், அதாவது ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 875 மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதி: ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். ஆனால், பயனாளியிடம் கோழிக்கொட்கை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளியாகவோ, அவர்தாம் குடும்பத்தினராகவோ இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: மேற்கண்ட தகுதிகள் உள்ள விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா அல்லது அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்குப் பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை அளித்து பயனடையலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக அளவில் நீதியை நிலைநாட்டுவதில் சர்வதேச நீதிமன்றத்தின் பங்கு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.