கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1,79,907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணையதள விவரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1. | விஜய்வசந்த் (வெற்றி) | காங்கிரஸ் | 546248 |
2. | பொன்.ராதாகிருஷ்ணன் | பாஜக | 3,66,341 |
3. | மரிய ஜெனிஃபர் | நாதக | 52721 |
4. | நாசரேத் பாசிலியன் | அதிமுக | 41393 |
- வாக்கு எண்ணிக்கையின் போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விஜய் வசந்த் 4,13,135 வாக்குகளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2,56,995 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் நாசரேத் பாசிலியன் 30196 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் 37,566 வாக்குகளும் பெற்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜகவை விட 1,56,140 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 05.01 PM நிலவரம்.
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விஜய் வசந்த் 3,05,455 வாக்குகளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 1,50,127 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் நாசரேத் பாசிலியன் 22,772 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் 27,223 வாக்குகளும் பெற்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜகவை விட 1,15,169 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 03.38 PM நிலவரம்.
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விஜய் வசந்த் 2,31,312 வாக்குகளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 1,30,663 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் நாசரேத் பாசிலியன் 17,303 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் 20,002 வாக்குகளும் பெற்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜகவை விட 1,00,649 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 02.25 PM நிலவரம்.
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3வது சுற்று முடிவில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விஜய் வசந்த் 80827 வாக்குகளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 48187 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் நாசரேத் பாசிலியன் 6302 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் 6547 வாக்குகளும் பெற்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜகவை விட 32640 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 12.20 PM நிலவரம்.
- கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார். - 9.43 நிலவரம்
கன்னியாகுமரி தொகுதியில் இம்முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் சிட்டிங் எம்பியான விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் நாசரேத் பாசிலியன் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். மேலும், இத்தேர்தலில் மொத்தம் 10,19,532 (65.44%) வாக்குகள் பதிவாகி உள்ளன.
2019 தேர்தலில் வெற்றி வேட்பாளர்?: கடந்த 2019 நாடாளுன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டார். இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6,27,235 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் எச்.வசந்தகுமார். இந்த நிலையில் நாடளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 28 அன்று இறந்தார். அதையடுத்து 2021ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார். இந்த தேர்தலில் விஜய் வசந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைவிட 1,34,374 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளும், பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிட்டர் ஆல்வின் 59,593 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட சுபா சார்லஸ் 8,536 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க: முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மும்முனை போட்டி... கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்ற போவது யார்? - Kanyakumari Election Result 2024