ETV Bharat / state

கண்டா வரச் சொல்லுங்க.. எம்பியை காணவில்லை - முற்றும் போஸ்டர் மோதல்! - ADMK

Thanjavur Poster issue: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், “தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை” என்ற கண்டா வர சொல்லுங்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

kanda vara sollunga thanjavur poster issue
தஞ்சையில் பரபரப்பை கிளப்பிய "கண்டா வர சொல்லுங்க" போஸ்டர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:41 PM IST

தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும், தொகுதிப் பங்கீடு வேலையும் தீவிரமாகி வருகிறது. இதனிடையே தேர்தல் தொடர்பாக வேலைகளும், பிரச்சாரங்களும் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் குறிப்பிடும் வகையிலும் 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற போஸ்டர் பிரச்சார வியூகத்தை அதிமுக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த போஸ்டர் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், அந்தந்த எம்பி தொகுதிகள் என அச்சிடப்பட்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இது போன்ற போஸ்டர்கள் திமுக எம்பிக்களை கலக்கத்தில் ஆழ்த்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போது இந்த போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று (மார்ச் 1) தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என்ற பெயரில், 'தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை, கண்டா வர சொல்லுங்க' என்ற போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், அதில் அரசியல் கட்சி தலைவர்கள் அமித்ஷா, இபிஎஸ், அண்ணாமலை ஆகியோரின் கேலிச்சித்திர உருவப் படத்துடன் அச்சிடப்பட்டு, தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவிற்கு போட்டியாக திமுக பதிலடி கொடுக்கும் வகையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினரிடையே கூறப்படுகிறது. தற்போது அதிமுகவையும் பாஜகவையும் விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும், "எம்பியை காணவில்லை.. கண்டா வர சொல்லுங்க" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக திருச்சியில், எம்பியை காணவில்லை என்ற போஸ்டர் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட எம்பி திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் என்ன அமெரிக்காவிலா இருக்கிறேன், இதே திருச்சியில்தான் இருக்கேன். யார் என்னை பார்க்க வேண்டுமோ, அவர்கள் நேரில் வாருங்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

இதேபோல, மதுரையில் ஒட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்ற போஸ்டர் முன்பு நின்று, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் புகைப்படம் எடுத்ததோடு, அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு "I am waiting" என பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் நானே போட்டி" - எம்.பி.,ஜோதிமணி திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.