கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் அதிமுக வேட்பாளர் குமரகுருவை விட 53,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணையதள விபரம்:
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | மலையரசன் | திமுக | 5,61,589 |
2 | குமரகுரு | அதிமுக | 5,07,805 |
3 | ஜெகதீசன் | நாதக | 73,652 |
4 | தேவதாஸ் | பாமக | 71,290 |
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில், 15 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக -349083, திமுக - 390839, பாமக - 48661, நதக - 49937 வாக்குகளை பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் மலையரசன் 41,756 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் காலை 11.15 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் மலையரசன் 94,689 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 83,373 பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இரு கட்சி வேட்பாளர்களுதக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளதால் இத்தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக - தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, பாஜக - பாமக கூட்டணியில் பாமக வேட்பாளர் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலில் மொத்தம் 12,04,375 (81.6%) வாக்குகள் பதிவான கள்ளக்குறிச்சி தொகுதியில் இம்முறை 12,42,597 (79.21%) வாக்குகள் பதிவாகின.
2019 தேர்தல் வெற்றி நிலவரம்: திமுக சார்பில் போட்டியிட்ட திமுக மூத்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி 7,21,713 (60 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் 3,21,794 (26.79%) சதவீதம் வாக்குகளை பெற்றார். கிட்டத்தட்ட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அபார வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர் கோமுகி மணியன் 50,179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சர்புதீன் 30,246 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024; அதிமுக, திமுக இருமுனைப் போட்டியில் கள்ளக்குறிச்சியை கைப்பற்ற போவது யார்? - Lok Sabha Election 2024