ETV Bharat / state

அதிமுக மா.செ., தாக்கியதாக கட்சி நிர்வாகி கண்ணீர்? - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்! - kallakurichi admk kumaraguru - KALLAKURICHI ADMK KUMARAGURU

kallakurichi admk kumaraguru: கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, தன்னை தாக்கியதாக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கிருஷ்ணன்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 3:17 PM IST

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை நகர அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான கிருஷ்ணன் நேற்றைய தினம் விழுப்புரம் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு ஆகிய இருவரும் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.

கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அவர்களுடைய அழைப்பின் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவின் வீட்டிற்கு, நானும் என்னுடைய மனைவியும் சென்றோம். அப்போது பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கே இருந்தனர் அப்போது குமரகுரு என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, எனது மனைவியின் கண் முன்னே எனது கழுத்தை நெரித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

எனக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோரே பொறுப்பு. மேலும் என்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் காப்பாற்ற வேண்டும்.

என் குடும்பத்துக்கு நீதி வேண்டும். இனிமேல் எந்த ஒரு அதிமுக தொண்டருக்கும் எனக்கு ஏற்பட்டதுபோன்ற பாதிப்பு ஏற்படக் கூடாது" என கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார்.

இதேபோல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணனின் மனைவி, "கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுருவிற்காக எனது கணவர் எவ்வளவு உழைத்தார் என்பது உளுந்தூர்பேட்டை நகர் பகுதியில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆனால் தற்போது, அவரது வீட்டிற்கு அழைத்து எனது கணவரை கழுத்தை நெரித்து தாக்கியதொடு மட்டும் அல்லாது, கதவை பூட்டிவிட்டு எனது கணவரை உயிரோடுவிடக்கூடாது என கூறி அடிக்க வந்தார். என் கணவர் குமரகுருவிற்கு அப்படி என்ன துரோகம் செய்தார்?" என்று கண்ணீர்மல்க ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை நகர அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு குறித்து பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக குமரகுரு தரப்பில் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'இந்த ரூட்ல எப்படி வருவ?' உருட்டு கட்டையுடன் பாய்ந்த மினி பஸ் டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.