ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறைக்கான அறிக்கைக்கு ‘நோ கமெண்ட்’ சொன்ன நீதியரசர் சந்துரு! - Justice Chandru - JUSTICE CHANDRU

Drawing Exhibition: திருச்சியில் தனியார் ஓவியப் பள்ளி சார்பில், 'சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்' ஓவியக் கண்காட்சியை நீதியரசர் சந்துரு தொடங்கி வைத்தார்.

நீதியரசர் சந்துரு
நீதியரசர் சந்துரு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 8:05 PM IST

திருச்சி: திருச்சியில் தனியார் ஓவியப் பள்ளி சார்பில், 'சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்' ஓவியக் கண்காட்சி தனியார் திருமண மண்டபத்தில் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமையில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 133 ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்மை விருந்தினர் நீதியரசர் சந்துரு கண்காட்சியினை திறந்து வைத்தார்.

நீதியரசர் சந்துரு, பள்ளி முதல்வர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட 3வது கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி மற்றும் ஓவியர் மனோகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும், முதல்வர் நஸ்ரத் பேகம், பொற்கொடி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒவியக் கண்காட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்புச் சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்புச் சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்துரு, “பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என்ற பிரச்னை வெகு நாட்களாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும், அது எதிர்பார்த்த பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்துள்ளது.

இந்த சட்டங்கள் எல்லாம் தாண்டி வேறு என்ன செய்ய முடியும் என யோசித்து வருகின்றனர். ஒவ்வொரு சம்பவம் நடக்கும் பொழுது ஒவ்வொரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டங்கள் எப்படி நிறைவேறுகிறது என்று நாம் பார்த்தால் போதுமான திருப்தி இல்லாமல் போகிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவானது 15 நாட்களுக்குள் அறிக்கை தர உள்ளது. அது தொடர்பாக புதிய சட்டம் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன். அது வந்த பின்பு தான் அதனுடைய நடைமுறைகள் எப்படி இருக்கும் என தெரியும். பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு அறிக்கை வழங்கியது தொடர்பான கேள்விக்கு, நான் வழங்கியது அரசாங்கத்திற்கான ஆலோசனை மட்டும் தான். அதனை அரசு ஏற்றுக் கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம் நோ கமெண்ட்‌" என்று தெரிவித்தார்.

முதல்வர் நஸ்ரத் பேகம் தெரிவித்ததாவது, "ஓவியம் மூலம் ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றை அளித்து வருகிறோம். இந்த தடவை சித்திரங்கள் பேசும் சரித்திரங்களின் மூலம் சட்டங்கள் பற்றி ஓவியமாக மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

அரசு நிறைய சட்டங்கள் இயற்றி இருக்கிறார்கள். ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. சட்டங்களை ஓவியமாக பார்க்கும் போது மக்கள் அதை புரிந்து கொண்டு வருங்காலத்தில் பின் தொடர்வார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : காரைக்குடியை நகராட்சியாக மாற்றியதால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிப்பு.. எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை! - Ariyakudi village women protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.