ETV Bharat / state

மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பா?.. ராயப்பேட்டை ஒயிட் சாலையில் நீதிபதி ஆய்வு! - Demolition of temple for metro work - DEMOLITION OF TEMPLE FOR METRO WORK

Demolition of temple for metro work: ராயப்பேட்டை ஒயிட் சாலையிலுள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் மெட்ரோ ரயிலுக்காக இடிக்கப்படும் என்பதால் சென்னை உயர் நீதிபதி குமரேஷ் பாபு நேரில் பார்வையிட்டு கோயிலை இடிப்பதா? அல்லது மாற்றுவதா? என மெட்ரோ அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

நீதிபதி குமரேஷ் பாபு ஆய்வு
நீதிபதி குமரேஷ் பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 7:40 PM IST

சென்னை: ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜகோபுரத்தை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் ராஜகோபுரத்தை இடிக்க தடை விதிக்க கோரியும் ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பாதையை வேறு இடத்துக்கு மாற்றினாலும், துர்க்கை அம்மன் கோயில் கோபுரத்தையும், ரத்தின விநாயகர் கோயில் கோபுரத்தையும் அகற்ற வேண்டிய நிலை உள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் துர்க்கை அம்மன் கோயிலின் பிரதான கோபுரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் பாதுகாப்பான இடத்தில் மாற்ற முடியும். பக்தர்கள் விரும்பினால் அதே இடத்தில் விநாயகர் கோயில் கட்டித் தரப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, அந்த கோயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

அப்போது மனுதாரர் சார்பில், இந்த கோயில் பழமையான கோயில். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோயிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு வருகிறார்கள் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், மூத்த வழக்கறிஞர்கள் ரவி, வி.ராகவாச்சாரி ஆகியோருடன் நீதிபதி குமரேஷ்பாபு கோயிலை பார்வையிடவுள்ளதாகவும், அதன் பிறகு முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதி குமரேஷ்பாபு, இன்று காலை ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ராஜகோபுரம் ஆகியவற்றையும், மெட்ரோ ரயில் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, அந்த பகுதி மக்களிடம் விசாரித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விஜய் கூறுகையில், “இன்று நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோயிலை இடிக்காமல் வேறு திசையில் மெட்ரோ நிலையத்தை வைப்பதற்கு கோயில் தரப்பு சார்பில் வரைபடங்கள் அமைக்கப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க உள்ளோம்.

மெட்ரோ ரயில் நிலையம் நேராக தான் இருக்க வேண்டும், வளைவாக இருக்கக் கூடாது என்று மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை சைதாப்பேடடையில் முதல் வளைவு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இடப் பற்றாகுறை இருக்கும் இடத்தில் சிறிய ரயில் நிலையமும், பெரம்பூரில் ஈரடுக்கு மெட்ரோ பாலம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது எனவே ராயப்பேட்டையில் உள்ள ஒயிட் சாலை 80 அடி சாலை. அவர்கள் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. கோவை கலைஞர் நெகிழ்ச்சி வடிவமைப்பு! - Wayanad Elephant statue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.