சென்னை: சென்னை, ராயப்பேட்டை, எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ஓ.எஸ் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, "ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் பல உண்மைகள் வெளிவரப் போகிறது என்றும், அவர் ஒரு சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் மன்னன். அவருக்கு திமுக அயலகப் பிரிவில் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது. மேலும், ஜாபர் சாதிக் கொடுக்கப்போகும் ஒப்புதல் வாக்கு மூலத்தை நினைத்து திமுகவிற்குப் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், திமுகவிற்கும் அதன் அமைச்சர்களுக்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சத்திற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
26 குற்றங்கள் புரிந்த நபருக்கு டிஜிபி பரிசளிக்கும் அளவு ஆட்சி மோசமாக உள்ளது. ஜாபர் சாதிக் கைதால் திமுக கலகலத்துப் போயுள்ளதாகவும் மத்தியப் புலனாய்வுத் துறை இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்து இதுவரை 10 சதவீதம் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும் என குறிப்பிட்ட அவர் ஜாபர் சாதிக் கைது நடவடிக்கை மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் எனவும் திமுகவிற்கு இது ஒரு பின்னடைவு மட்டுமல்லாது மரண அடியாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெய்பூரில் சிக்கிய ஜாஃபர் சாதிக்.. போதைப்பொருள் கடத்தலில் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு.. என்சிபி அளித்த ஷாக் ரிப்போர்ட்!