ETV Bharat / state

"திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்! - MMK request on alot constituency

Jawahirullah: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாத நிலையில், தொகுதி பங்கீட்டை திமுக தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

"நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் வழங்க வேண்டும், இல்லையெனில்.."- ஜவாஹிருல்லா கூறியது என்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 10:18 AM IST

ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆலோசிக்க அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாத நிலையில், தேர்தலின் போது கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கச் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும், மாநிலங்களின் உரிமைகளையும், மதச்சார்பின்மை ஆகியவற்றை அடியோடு அழிக்கும் எண்ணத்தில் தான் பாஜக ஆட்சி செய்து வந்துள்ளது. அதனை மீண்டும் தொடர்வதற்காகவும், திட்டங்களை நிறைவேற்றிட பாஜக தேர்தலை ஒரு கருவியாக்கி சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கர அபாயங்களிலிருந்து நாட்டை மீட்பதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஓர் அணியில் திரண்டு உருவாக்கிய இந்தியா கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்க, தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த பத்தாண்டுகளாக மனிதநேய மக்கள் கட்சி திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது.

மேலும், மக்களவையில் இஸ்லாமிய பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மமக போட்டியிட வாய்ப்பு வழங்க, திமுக தலைவர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இல்லை எனில் 2025ல் தமிழகத்தில் காலியகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் ஒரு எம்பி சீட்டை அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளை காக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நலன்களை காவு கொடுத்து வருகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து 24 மணி நேரத்தில் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த மாலையே நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக பாஜக அரசு அறிவித்தது. இது அவர்களின் வன்ம அரசியலின் உச்சத்தை வெளிக்காட்டுகிறது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இச்சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது. பாஜகவின் இந்த நிலைப்பாட்டை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. மேலும் இது தொடர்பாக பாஜக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிலை என்ன? - மன்சூர் அலிகான் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.