ETV Bharat / state

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 5:13 PM IST

IUML: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக மீண்டும் நவாஸ் கனி போட்டியிடப் போவதாக அறிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக, திமுக தலைமைக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் தற்போது எம்.பியாக இருந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நவாஸ் கனியை, மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, இந்திய நாட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்து, சாதி அடிப்படையில் வேறுபடுத்தி, 75 ஆண்டுகளாக பின்பற்றிய இந்திய நாட்டின் கலாச்சாரம், அரசியல் சாசன நடைமுறைகளை சிதைத்து, குலைத்து அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொங்கு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்தால், இரட்டிப்பு வரவேற்பு கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் நவாஸ் கனியின் வெற்றிக்கு துணை நிற்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் நிதி வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்வதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து அமைப்புகளின் ஆற்றல்மிகு செயல்வீரர்கள் ராமநாதபுரம் தொகுதியில் களப்பணி ஆற்றிட முன்வர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக - தமாகா கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை; ஜி.கே.வாசன் 5 இடங்களை கேட்பதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.