ETV Bharat / state

உலகிலேயே முதல் முறையாக ஏஐ டேட்டா அனாலிடிக்ஸ் படிப்பு அறிமுகமாக உள்ளது - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்! - AI Data Analytics course

IIT Madras: அடுத்த ஆண்டு உலகத்திலேயே முதல் முறையாக ஏஐ டேட்டா அனாலிடிக்ஸ் படிப்பை அறிமுகப்படுத்துகிறோம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Thanjavur
தஞ்சாவூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 9:55 PM IST

"உலகிலேயே முதல் முறையாக ஏஐ டேட்டா அனாலிடிக்ஸ் படிப்பு அறிமுகம்" - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு, 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நமது நாட்டில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கல்வி அவசியம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், படிப்பறிவு இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள். அந்த காரணத்திற்காக பலவிதத்தில் கல்வியைக் கொண்டு சேர்ப்பதற்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் Tyre 2, Tyre 3 என்ற அளவில் கொண்டு சேர்ப்பது கடமை.

பாரத பிரதமரின் விக்சித் பாரத் 2047 கனவு, கிராமப்புறங்களில் படிப்பை கொண்டு சேர்ப்பது. அதை ஐஐடி செய்து வருகிறது. மேலும், ஐஐடி நிறுவனத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடுத்த வருடம் ஆராய்ச்சி முறையில் ஆரம்பித்துள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு ஐஐடியில் B.Tech படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு. இது குறித்த தகவல் ஐஐடி வெப்சைட்டில் உள்ளது.

இன்றைக்கு ஏஐ டேட்டா சயின்ஸ் (AI DATA SCIENCE) மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்றைக்கு மார்க்கெட் எகனாமிக் மாறியுள்ளது. பல துறைகளில் ஏஐ டேட்டா சயின்ஸ் வந்துள்ளது. குறிப்பாக கெமிக்கல், ஹெல்த், ஸ்மார்ட் சிட்டி, விவசாயம் போன்ற துறைகளில் ஏஐ உள்ளது.

அடுத்த வருடம் உலகத்திலேயே முதல் முறையாக ஏஐ டேட்டா அனாலிடிக்ஸ் படிப்பை அறிமுகப்படுத்துகிறோம். 2024 ஜூலை முதல் அட்மிஷன் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பிற்கும், ஆராய்ச்சிக்கும், ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்றும் பாரத பிரதமர் விக்சித் பாரத் 2047 என்று கூறியுள்ளார்.

அதுபோல, இந்தியா மாறுவதற்கு மாணவர்களுடைய யோசனையைபாதுகாக்க வேண்டும். இந்த வருடம் ஐஐடியில் 368 மாதிரி காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று அவர்களுடைய பாடத்திட்டத்தை மாற்றம் செய்துள்ளது. கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக சில மாற்றங்கள் அடுத்த வருடம் செய்ய உள்ளது.

மேலும், உலகத்தில் முதன்முறையாக Medicine and Technology சேர்த்து, பிஎஸ்சி மெடிக்கல் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரவர மாணவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் என்கிற காலம் மாறி, மற்ற இன்ஜினியரிங் துறைக்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

குறிப்பாக சந்திரயான், ஆதித்யா வந்த பிறகு Aerospace-இல் நிறைய ஆர்வம் வந்துள்ளது. மெக்கானிக்கல், சுரங்கப்பாதை, பாலம், அணை, சுற்றுப்புறச்சூழல், ஆற்றல், சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஆர்வம் அதிகமாகி உள்ளது. இது இந்தியாவிற்கு தேவை. ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் துறையில் 32 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

13 இன்டர் ஐஐடி ஸ்போர்ட்ஸ் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. சில விளையாட்டுக்களை வருங்காலங்களில் சேர்க்க உள்ளோம். தேசிய கல்விக் கொள்கை (National education Policy) ஐஐடி நிறுவனத்திற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் ராமகிருஷ்ண மடம் விமூர்த்தானந்தர், கல்லூரி தலைவர் மருதுபாண்டியன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறார் யூசுப் பதான்.. மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.