ETV Bharat / state

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி தேர்வர்கள் கவனத்திற்கு..! - TNMAWS exam 2024 - TNMAWS EXAM 2024

TNMAWS exam 2024: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கு தேர்வு நடைபெறும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பான புகைப்படம்
தேர்வு தொடர்பான புகைப்படம் (Credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 1:54 PM IST

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், நகராட்சி திட்ட பொறியாளர் பணிக்கு ஜூலை 7ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள 2 லட்சத்து 880 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 149 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வினை எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஹால் டிக்கெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1. விண்ணப்பதாரர்கள் கருப்பு மை பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கருப்பு மை பந்து முனை பேனாவை தவிர வேறு பேனாவை பயன்படுத்தினால் விடைத்தாள் செல்லாததாகிவிடும்.

2. காலையில் தேர்வு எழுதுபவர்கள் மையத்திற்கு காலை 9.10 மணிக்குள் வரவேண்டும். 9.30 மணிக்கு தேர்வு துவங்கும். மதியம் நடைபெறும் தேர்விற்கு 1.40 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும். 2 மணிக்கு தேர்வு துவங்கும். காலை 9.30 மற்றும் மதியம் 2 மணிக்குப் பிறகு தேர்வு அறைக்குள் நுழைவதற்கு எந்தவொரு விண்ணப்பதாரரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வு நேரம் முடிந்த பின்னரே தேர்வர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

3. வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் தேர்வு ஆரம்பிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தேர்வாளர்களுக்கு வழங்கப்படும்.

4. விண்ணப்பதாரர் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும், தவறினால், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.

5. தனது அடையாளச் சான்றுக்கு ஆதார் அட்டை ,பாஸ்போர்ட் ,ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசினால் வழங்கப்பட்ட அசல் அடையாளச் சான்றினை கொண்டு வர வேண்டும்.

6. விண்ணப்பதாரர்கள் கண்ணியமான ஆடைகளை (ஆண்கள் பேண்ட் , சட்டை மற்றும் பெண்கள் புடவை அல்லது சுடிதார்) அணிந்திருக்க வேண்டும் மற்றும் ஹால் டிக்கெட்டுடன் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையத்தை அடைய வேண்டும்.

7. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்தில் கண்டிப்பான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தேர்வர்கள் புகைபிடித்தல் அல்லது குடிபோதையில் அல்லது ஏதேனும் தகராறில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது தலைமை கண்காணிப்பாளர் , ஆய்வு அதிகாரிகள், கண்காணிப்பாளருடன் ,தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வு எழுத வந்த வேறு விண்ணப்பதாரருடன் தவறாக நடந்து கொண்டாலோ, அவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பதோடு தகுந்த குற்றவியல் நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

8. எந்த ஒரு விண்ணப்பதாரரும் ஒரு பதவிக்கு இரண்டு பாடத்திற்கான தேர்வு எழுதக்கூடாது.

9. விடைத்தாளில், அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பதிவு எண் எழுதப்படாவிட்டாலும், OMR விடைத்தாளின் பக்கம் 2 இல் விளக்கப்பட்டுள்ள சரியான முறையின்படி பதில்கள் பூர்த்தி செய்யாமல் இருந்தாலும், OMR விடைத்தாளின் பக்கம் 1 இல் அச்சிடப்பட்ட பார்கோடு/OMR-தடம் சிதைந்திருந்தாலும் ,OMR விடைத்தாளில் தேவையான இடத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திடாமல் ,மற்ற தேர்வாளரின் இடத்தில் தவறாக அமர்ந்து அல்லது மற்ற தேர்வாளரின் OMR விடைத்தாளைப் பயன்படுத்தி தேர்வு எழுதினாலும், வினாக் கையேட்டின் எண்ணை எழுதி, அதற்குரிய வட்டங்களை நிழலிட வேண்டும். வட்டத்தில் விண்ணப்பதாரர் நிழலிட்ட வினா புத்தக எண்ணே இறுதியானதாகக் கருதப்படும், சரியான வினாக் கையேடு எண் எழுதப்பட்டிருந்தாலும், வினாக் கையேடு எண்ணுக்கான வட்டங்கள் நிரப்பாமல் இருந்தாலும் கீழ்க்கண்ட தவறுகள் இருந்தாலும் OMR விடைத்தாள் செல்லாததாகிவிடும்.

10. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் OMR விடைத்தாளில் உள்ள பதில் வட்டங்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் குறிக்கப்பட்டால், நீங்கள் குறிப்பிட்ட வட்டங்களில் ஒன்று சரியாக இருந்தாலும் அந்த பதில் தவறான விடையாகக் கருதப்படும். தேர்வருக்கு பதில் தெரியாவிட்டால், விருப்பம் (E) கட்டாயமாக நிழலிடப்பட வேண்டும்.

11. விண்ணப்பதாரர்கள் செல்லுலார் போன், கால்குவேட்டர்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் மோதிரங்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனத்தையோ , புத்தங்கள், குறிப்புகள், கைப்பைகள் மற்றம் பதிவு சாதனங்கள் போன்ற மின்னணு அல்லாத சாதனங்கள் ஆகியவற்றையோ, தனித் துண்டாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ, தேர்வு தேதியன்று தேர்வு அறைக்கு கொண்டு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்கள் சொந்த நலன் கருதி, மொபைல் போன்கள் , கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதமற்றது.

12. தேர்வு மையத்தில் முறைதவறுதல், ஒழுக்கமின்மை,ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் தேர்வு மையத்தில் அல்லது வெளியில் நியாயமற்ற வழிகளில் ஈடுபடுவது உட்பட எந்தவொரு முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்குவதுடன், நிர்வாகத்தால் பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு காலத்திற்கும் தடைக்கு வழிவகுக்கும்.

13. தேர்வர்களுடன் வரும் பெற்றோர் மற்றும் பிறர் தேர்வு நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

14. தேநீர், காபி, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவை தேர்வு நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. பொதுத் தமிழ் தாளுக்கு 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம். விண்ணப்பதாரர்கள் தமிழ் தாளில் 40 சதவீத மதிப்பெண் பெறவில்லை என்றால், விடைத்தாளில் அடுத்த பகுதி மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

15. விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். OMR விடைத்தாள் செல்லாததாகிவிடும்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் பல்கலைக்கழகம்; ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.