ETV Bharat / state

"தமிழகத்திற்கு ரெட் அலர்ட்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! - Tamil Nadu Red Alert

தமிழ்நாட்டிற்கு வரும் 20ஆம் தேதி ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Etv Bharat
Representative image (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:21 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 20 தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல் இன்று (மே.17), நாளை (மே.18), நாளை மறுநாள் (மே.19) மற்றும் 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் மிககன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவிலும் வரும் 20ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கும் அன்றைய தினம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையில் இருந்து வரும் 21 ஆம் தேதி வரை கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மே 9ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 16.4 சென்டிமீட்டர் என்றும், ஆனால், 25.9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி, இயல்பிலிருந்து கூடுதலாக 58 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

இந்த 7 நாட்களில் இந்தியாவில் 13.3 சென்டிமீட்டர் மழை பதிவாக வேண்டும் என்றும் ஆனால், 14.1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் ஒட்டுமொத்தமாக இயல்பிலிருந்து 6 சதவீதம் கூடுதலாகும். இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கேரளாவின் சில மாவட்டங்களுக்கும் வரும் 18, 19, 20 ஆகிய நாட்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 18ஆம் தேதி மல்லபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 19ஆம் தேதி இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் 20ஆம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் மத்திய மற்றும் தென் மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.