சென்னை: கடலோர கர்நாடகா, கோவா, வடக்கு கேரளாவின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கடலோர ஆந்திரா, தெலங்கானா, கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் குஜராத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இவை, அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரையை அடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கடலோர ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 2 மாநிலங்களிலும், யாணம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை அதிக மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விதர்பா, தெற்கு சட்டிஸ்கரில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழையும், தெற்கு ஒடிசாவில் நாளை அதி கன மழை பெய்யும் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, குஜராத்தின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடலோர கர்நாடகா, கோவா, வடக்கு கேரளாவின் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இந்திய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. நீலகிரிக்கு ரெட் அலர்ட்!