புதுடெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகே பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு, வாழ்வாதாரக் கவலைகளை காரணியாகக் கொண்டு, மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையின் மூலம்தீர்வு: மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையும் இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் அண்மையில் நடைபெற்ற மீன்வளத்துறையின் 6 ஆவது இணை பணிக்குழு கூட்டத்தின் முடிவுகளை வரவேற்பது என்றும் இரண்டு தலைவர்களும் முடிவு எடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையின் மூலம் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டின் மூலம் நீடித்த பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், காரைநகர் படகுத் தளத்தை புனரமைத்தல் மற்றும் இந்திய உதவியுடன் மீன் வளர்ப்பில் ஒத்துழைப்பு வழங்குதல்.என்பது உட்பட இலங்கையின் மீன்வளத்துறையை நீடித்த, வணிக ரீதியான முன்னெடுப்புக்கு இந்தியாவுக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதே போல இருநாடுகளும் நீர்வரைவியலில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது என்றும் முடிவு செய்யபபட்டுள்ளது. கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்கு பிராந்திய அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முக்கியமன தளமாக இருக்கும்,"என்று கூறினார்.
5 பில்லியன் டாலர் உதவி: மேலும் பேசிய பிரதமர் மோடி, "நமது பாதுகாப்பு ஆர்வங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. விரைவில் இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இணைய வழி பாதுகாப்பு, கடத்தல், ஒருங்கணைந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பேரிடர் நிவாரணம் மற்றும் மனித நேய உதவிகள் ஆகியவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை விரிவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
A new milestone in the 🇮🇳-🇱🇰 partnership.
— Randhir Jaiswal (@MEAIndia) December 16, 2024
Wide-ranging discussions held between the delegations of India and Sri Lanka led by PM @narendramodi and President @anuradisanayake respectively.
Both sides reviewed the comprehensive 🇮🇳-🇱🇰 partnership and agreed on a roadmap to deepen… pic.twitter.com/D23ebIWgdV
இருநாடுகளும் எதிர்கால கண்ணோட்டத்தை மேற்கொள்ள உள்ளன. அதிபராக பதவி ஏற்ற உடன், முதன்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதை இந்தியா வரவேற்க்கிறது. இலங்கை அதிபரின் வருகையானது இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் புதிய வேகத்தையும், சக்தியை கொண்டு வருகிறது.
இந்தியா இதுவரை இலங்கைக்கு கடன், மானிய உதவியாக 5 பில்லியன் டாலர் கொடுத்துள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டாண்மை நாடுகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களையே நாம் எப்போதும் மேற்கொள்கின்றோம். கல்வி ஒத்துழைப்பின் கீழ்,அடுத்த ஆண்டில் இருந்து கிழக்கு மாகாணம், யாழ்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 200 மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவி வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையை சேர்ந்த 1500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன,"என்றார்.