ETV Bharat / state

இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் நவீன மையம் சென்னையில் தொடக்கம்! - indias largest Robotics Center - INDIAS LARGEST ROBOTICS CENTER

இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையம் (Robotics Center) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) ரூ.5 கோடி செலவில் இம்மையத்தை துவங்கியுள்ளது.

சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம், ரோபோட்
சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம், ரோபோட் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 5:31 PM IST

சென்னை: இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையத்தை ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Chennai Institute of Technology) கல்லூரி, உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தைதொடங்கியுள்ளது.

சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் பேட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும். கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை , எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது. இதன் மூலம் ஏராளாமான மாணவர்கள் வேலைவாய்ப்பில் பயன் பெறுவர்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை குகா(KUKA) மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் ஃபேம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பின்னர் சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் மற்றும் KUKA நிறுவனத்தின் மேலாளர் ராகவன் பேசியதாவது, “இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் லேர்னிங் சென்டர், தமிழக அரசு தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர உள்ளார்கள். வருங்காலத்தில் ரோபோடிக் பொறியாளர்கள் அதிகளவில் உருவாக்க இங்கு ஆரம்பித்திருக்கிறோம்.

இதையும் படிங்க: ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வாங்கலாமா? இத தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!

மேலும், மருத்துவத்துறையில் கிரிட்டிக்கல் சர்ஜரி, எக்ஸ்ரே எம்ஆர்ஐ ஸ்கேன் பிசியோதெரபி போன்றவைகளை சிரமமின்றி எளிதாக கையளும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் ரோபோட் ஒரு மிஷனாக இல்லாமல், டாக்டரின் கையாகவே இருந்து செயல்படும் ரோபோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள் இந்தியாவை விட ரோபோட்டில் 30 மடங்கு வளர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் இப்பொழுதுதான் இந்த துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் நிறைய பொருட்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியும் அதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும்.

1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும் கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை , எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது.

வேலை வாய்ப்புகள்: மொபைல்ஃபோன்களை ரோபோடிக் இல்லாமல் மேனுபேக்ச்சரிங் பண்ணவே முடியாது. ரோபோட்டிக் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் ஒரு சில வேலைகளை ரோபோடிக் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சைனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ரோபோட்டிக் பாப்புலேஷனில் 5 சதவீதம் கூட நம் நாட்டில் கிடையாது. ஆனால் இப்போது வருகின்ற காலங்களில் இந்தியா அந்த மார்க்கெட்டை பிடிக்க போகுது, வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிகமாக உருவாகும்” இவ்வாறு கூறினர்.

மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் என கல்லூரி தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.