இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " சுதந்திர தினவிழா, 15.08.2024 ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு, ஆகஸ்ட் 05,09 மற்றும் 13 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால் காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றி அமைக்கப்படவுள்ளது.
Traffic Diversion, in view of Independence Day Celebrations to be held on 15th August 2024 at St. George Fort, 05.08.2024, 09.08.2024 and 13.08.2024 on those days the parade rehearsal will take place.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 5, 2024
Timing: from 06.00 hrs. to till the function is over.#Chennai #Traffic pic.twitter.com/IoRbVZpoLt
1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2. காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFs Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
3. பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை, (NFS Road) இராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
4. அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
5. சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச்செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.
6. சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையிலிருந்து வாலஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயகை வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
7. நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
8. நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயகைத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
9. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய மழை.. 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!