ETV Bharat / state

அரியலூரில் திமுக பிரமுகர் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் ஐடி ரெய்டு! - ARIYALUR IT Raid

IT Ride: அரியலூர் திமுக இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் வீட்டில் நேற்றிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

INCOME TAX RAID at ARIYALUR
INCOME TAX RAID at ARIYALUR
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 11:06 AM IST

Updated : Apr 8, 2024, 11:59 AM IST

அரியலூர்: அரியலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர், அப்பு என்ற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி முதல் வருமான வரித்துறை நோடல் அதிகாரி மனோஜ் குமார் தலைமையிலான மூன்று குழுவினர், அரியலூர் நகரில் புது மார்க்கெட் தெரு 3வது சந்தில் உள்ள விநாயக வேலுக்குச் சொந்தமான வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவரது தந்தை அண்ணாதுரை வீட்டிலும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் ராணி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் சுமார் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணையில், அவருக்கு வந்த வருமானங்கள், கடந்த ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வருமான வரித் தகவல்கள், அவரின் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. நேற்று இரவு 11 மணி அளவில் தொடங்கிய சோதனையானது, தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சுமார் 10 மணி நேரமாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி - வினா போட்டி... தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 8, 2024, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.