ETV Bharat / state

அறுவடை நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்! மீன் வளர்போர் இடையூறா? பொதுப் பணி அதிகாரிகள் அலட்சியம் - விவசாயிகள் குற்றச்சாட்டு!

Paddy Damaged in Theni: அறுவடைக்கு தயாராக இருந்த வயல்வெளிகளில் கண்மாய் நீர் புகுந்ததால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்தததாகவும் இது குறித்து புகார் அளித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

தேனியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 3:16 PM IST

தேனியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியில் சில்வார்பட்டி கண்மாய் பாசனத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு, நெல் பயிரிடப்பட்ட நிலையில் தற்போது நெல் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

நெல் அறுவடை செய்வதற்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், விவசாயிகள் கடந்த 15 நாட்களாக நீர் பாய்ச்சாமல் வயல்வெளிகளை காய வைத்து அறுவடைக்கு தயார் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களுக்கு கீழே உள்ள வேட்டுவன் கண்மாயில் மீன் வளர்ப்பாளர்கள் அடைத்து வைத்திருந்த வாய்க்கால் நீரை திறந்து விட்டு, கடந்த இரண்டு நாட்களாக நீர் கொண்டு செல்வதாலும், கண்மாயில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் மூன்றடி உயரத்திற்கு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி நீரை தேக்கி வைப்பதாலும், கண்மாய்க்கு மேல் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் நீர் புகுந்தது.

இதையும் படிங்க: "மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்" - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

இதனால் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் சேதமடைந்து வருகிறது. இப்பிரச்சனை குறித்து அப்பகுதி விவசாயிகள் பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், வேட்டுவன் கண்மாய்க்கு திறந்து விட்டுள்ள நீரை நிறுத்தி நடவடிக்கை எடுக்காமல் கண்மாயில் மீன் வளர்ப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் விவசாயத்திற்காக கண்மாய்கள் அமைக்கப்பட்டதா? அல்லது மீன் வளர்ப்புக்காக கண்மாய்கள் அமைக்கப்பட்டதா? என விவசாயிகள் கேள்வி எழுப்புவதோடு திறந்து விடப்பட்டுள்ள நீரை நிறுத்தி அறுவடைக்கு தயாராக உள்ள நெல் விவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் கண்மாய்களில் மீன் வளர்ப்பவர்களால் நெல் விவசாயம் நடவு காலங்களிலும், அறுவடை காலங்களிலும் பாதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.10க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்: விவசாயிகள் வேதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.