ETV Bharat / state

நீலகிரி தொகுதியில் போட்டியிட்டால் ஆ.ராசா டெபாசிட்டை இழப்பார் - செங்கோட்டையன் ஆவேச பேச்சு - dmk mp A Raja

K.A.Sengottaiyan: "காற்றிலே ஊழல் செய்த ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் டெபாசிட்டை இழப்பார்" என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

IADMK ex minister Sengottaiyan said Raja lose his deposit if he contest Nilgiri constituency
எம்.பி ஆ.ராசா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 11:59 AM IST

எம்.பி ஆ.ராசா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு: சத்தியமங்கலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி நேற்று (பிப்.25) அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி, மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ‌.செங்கோட்டையன், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்து, அவரது ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.

நான் இதைக் குறிப்பிடுவதற்கான காரணம், காற்றிலே கொள்ளை அடித்தவர்கள் தான் இந்தக் கூட்டம். காற்றிலே ஊழல் செய்தவர் தான் ஆ.ராசா. நீங்கள் இதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 2016-ல் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி வாகை சூடியவர் புரட்சித்தலைவி அம்மா. ஒரே சின்னத்தில் நின்று வரலாறு படைத்தவர் அவர்.

இந்த ஆட்சியில், செங்கல் சூளைக்கு மண் எடுக்கப் பர்மிட் வாங்குகிறார்கள். பர்மிட் இல்லாமல் ஒரு கூடை செம்மண் கூட எடுக்க முடியவில்லை. இதனால் செங்கல் சூளைகள் முடங்கியுள்ளன. பர்மிட் எடுத்தாலும், ராத்திரியில் தான் மண் ஓட்ட வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மண் எடுத்துச் செல்லலாம். அதிமுக ஆட்சியில் 9 ரூபாயாக இருந்த செங்கல், இன்று 13 ரூபாயாக உள்ளது.

செங்கல் தயாரிப்பதற்கு மண் கிடைப்பதில்லை. அதிமுக கூட்டணி, தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமையும். வலிமையான கூட்டணியை அமைத்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிட்டால், நிச்சயம் டெபாசிட் இழப்பார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.