தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 34 பேர் படித்து வருகின்றனர். இதில் முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் இந்த ஆண்டில் புதிதாக சேர்ந்தவர்கள். மேலும், இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியை உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் தமிழ்மணி. இவர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தமிழ்மணி பணிமாறுதல் பெற்றுள்ளார். இதை மாணவர்களிடம் தெரிவித்துவிட்டு அன்று பள்ளியை விட்டு திரும்பினார் தலைமையாசிரியர்.
பிரியா மனமும், போராட்டமும்: இந்நிலையில், இன்று காலை “தலைமை ஆசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி பள்ளிக்கே பணியமர்த்த வேண்டும், அவர் இங்கிருந்து பணிமாற்றம் செய்தால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்” என மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மொரப்பூர் வட்டாரக் கல்வி அலுவலர், காவல் துறையினர் உள்ளிட்டோர் போராட்டத்தை தடுத்தி நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆசிரியரும் அரசுப் பள்ளியும்: அப்போது பேசிய பெற்றோர்ம் “தமிழ்மணி தலைமை ஆசிரியராக வந்த பிறகுதான் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து அதிகரிக்க தொடங்கியது. தமிழ்மணி வீடு வீடாகச் சென்று மாணவர்களின் பெற்றோரிடம் பேசி மாணவர்களை இந்த இதே பள்ளியில் சேர்க்க செய்தவர்.
தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ்மணி மீது நம்பிக்கை கொண்டுதான் எங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளியில் சேர்த்துள்ளோம் என்றனர். தமிழ்மணி ஆசிரியயை தனது தனிப்பட்ட ஆர்வத்தால் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்பவர். மேலும், தமிழ்மணி தலைமையாசிரியர் போல் பிள்ளைகளை கவனமாக பார்த்து கல்வி கற்றுக்கொடுக்க முடியாது அதனால் நாங்கள் ஆசிரியர் பணி மாற்றம் பெற்றால் பிள்ளைகளையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவோம்.
மாணவர்களின் விரும்பியாக ஆசிரியர்: தமிழ்மணி தலைமை ஆசிரியாக பொறுப்பெற்றதிலிருந்து மாண்வர்களின் தனித்திறமையை கண்டறிந்து, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை, விளையாட்டு என பல்வேறு இடங்களுக்கு அழைத்து போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பாவராக இருந்தவர். இதனால் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடமும் பிடித்துள்ளனர். அதேபோல் மாண்வர்களை படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்த வைப்பவர். இதனால் மாண்வர்கள் ஆங்கிலத்தை ஆர்வமுடன் படித்து வந்தனர்” எனத்தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தலைமை ஆசிரியரை பணிமாற்ற வேண்டாம் என அழுதனர்.
பேச்சு வார்த்தையும் ஆசிரியர் கண்ணீரும்: அதிகாரிகள் பெற்றோர்களிடம் ஆசிரியரை விருப்பட்டுதான் பணி மாற்றம் பெற்றார் அதனால் 1 மாதம் களித்துதான் விருப்ப கடிதம் பெற்று மீண்டும் அவரை இங்கே பணியமர்த்த முடியும் என்றனர்.அதற்கு பெற்றோர்கள் அவர் வரும் வரை நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்மணி மாண்வர்களை பார்த்து அவரும் அன்பினால் தழும்பி கண்ணீர் விட உணர்ச்சி போங்கும் தருணமானது.பின் தமிழ் அளித்த வாக்கு உறுதியை நம்பி இருமாதத்திற்க்குள் மீண்டும் சேர்வதாக கூறியதால் பள்ளிக்குள் பிள்ளைகளை பெற்றோர்கள் விட்டுச்சென்றனர்.
இதையும் படிங்க: விவசாய சங்க நிர்வாகிகளின் வீட்டுக்காவல்; அய்யாக்கண்ணு மனுவுக்கு திருச்சி காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு! -